துபாயிலிருந்து 700 கையடக்கத்தொலைபேசிகளைக் கடத்தி வந்த நீர்கொழும்புப் பகுதியைச்சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் கட்டுநாயக்கவில் வைத்து இன்று காலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 5 மணியளவில் யூ.எல். 228 என்ற ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கியபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தி வந்த கையடக்கத்தொலைபேசிகளின் பெறுமதி 35 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
