யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வேலணைப் பகுதியில் தமிழ் நீதிபதி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த நாரந்தனையைச் சேர்ந்த 51 வயதுடைய சவரிமுத்து இயேசுராசா என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டவராவார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவல்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
