சனி, 3 செப்டம்பர், 2011

வருமானத்தை கொடுக்கும் பாதணி தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை

வெளிநாட்டு வருமானத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய புதிய பாதணி தொழிற்சாலை தென்மா காணத்தின் திஸ்ஸமகாராமயில் ஆரம்பிக்கப்பட்டிருப்பது, ஹம்பாந் தோட்டையிலுள்ள மத்தள விமான நிலையத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு காலணிகளை ஏற்றுமதி செய்வதற்கு பேருதவியாக அமையும் என்று சபாநாயகர் சமால் ராஜபக்ஷ திஸ்ஸமகாராமையின் முத்தியம்மாகம என்னும் இடத்தில் இந்த பாதணி தொழிற்சாலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். கிராமிய கைத்தொழில் துறையை உயர்த்த வேண்டும் என்ற மஹிந்த சிந்தனை எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதாக இந்தப் பாதணி தொழிற்சாலை அமைந்திருக்கிறது.

இங்கு 35 க்கும் மேற் பட்ட இளைஞர்களும், யுவதிகளும் பாதணித் தயாரிப்பு தொழிற் துறையில் நன்கு பயிற்சிபெற்ற பின்னர் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவற்றில் 10 ஆயிரம் பாதணிகள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் விற்பனை செய்ய முடியும் என்றும் சபாநாயகர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெரு மளவு சனத்தொகை இருக்கின்ற போதி லும், அங்குள்ள மக்களுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு வாய்ப் புக்களை அரசாங்கம் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது திஸ்ஸவாவியின் ஊடாக ஒரு கால்வாயை அமைக்கும் நிர்மாண வேலைகள் நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகள் முடிவடைந்த பின்னர் அப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்பை அளிக்கும் பல திட்டங்கள் அமுல்படுத்தப் படும் என்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி துறை அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரையின் கீழ் இந்த தொழிற் சாலைக்கு தேவையான மூலப் பொருட்கள் பெற்றுக் கொடுக்கப்படுவதுடன் அதன் நிர்வாகமும் சீரான முறையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.