இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை (இலங்கை அரசு மொழியில் தருஸுமன் அறிக்கை) சட்டவிரோதமாக ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்பட்டமை தொடர்பில் வலய நாடுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கவுன்ஸிலின் 18வது கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாது அவசரமாக குறித்த அறிக்கை மனித உரிமை கவுன்ஸிலில் சமர்பிக்கப்பட்டமை குறித்து வலய நாடுகள் கொள்கை அடிப்படையில் ஒன்றுசேர்ந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தருஸுமன் அறிக்கையை தயாரிக்க தகவல் பெறப்பட்ட விதம் குறித்து இதுவரை ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை என்பதால் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மீது சந்தேகம் எழுத்துள்ளதாக இலங்கை மனித உரிமை பிரதிநிதிகள் ஐநா மனித உரிமை கவுன்ஸிலில் தெரிவித்துள்ளனர்.
ஆபிரிக்கா, ஆசியா, லத்தின் அமெரிக்கா மற்றும் முஸ்லிம் வலய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இலங்கை மனித உரிமை பிரதிநிதிகள் ஜெனீவாவில் சந்திப்பு நடத்தி இது குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
