வெள்ளி, 16 செப்டம்பர், 2011

அரசு - கூட்டமைப்பு இன்று பேச்சுவார்த்தை! வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் அரசாங்க இன்று பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதனை உறுதி செய்தார்.
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதி களுக்குமிடையில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

ஆனால் இதுவரை காணப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் த.தே. கூட்டமைப்பு எழுத்து மூலமான உறுதியை அரசாங்கத்திடம் கோரியதையடுத்து பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான 10 ஆவதும் இறுதியுமான பேச்சுவார்த்தை ஓகஸ்ட் நடுப்பகுதியில் நடைபெற்றது.

இரு தரப்பினருக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் சார்பாக அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ் நிமல் சிறிபால டி. சில்வா பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் தமிழரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன் மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கே. கணேஷ்வரன் ஆகியோர் கலந்து கொள்வர்.