வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தேசியப் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு இணையம் மூலம் விற்பனை

நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்களுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையத்தளம் மூலம் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் செயற்திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்படி முதலில் யால தேசிய வனவிலங்குப் பூங்காவுக்கான நுழைவுச் சீட்டு விற்பனை நடவடிக்கைகள் இணையத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதன்மூலம் பூங்காவுக்கு விஜயம் செய்யவுள்ளவர்கள் தமக்கான தங்கும் இடங்களைக்கூட இணையத்தின் ஊடாகவே முன்கூட்டியே ஒதுக்கிக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு யுத்தநிறைவின் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறைப் பயணிகளின் கவனத்தை பெரும்பாலும் ஈர்ப்பதாக தேசியப் பூங்காக்கள் அமைந்துள்ளதாலேயே அவர்களை கவரும் வகையில் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், யுத்த நிறைவின் பின் தேசியப் பூங்காக்களில் மூடப்பட்டிருந்த சில வாயில்கள் திறக்கப்பட்டமையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.