இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் பிரதி வணிக நிர்வாகிக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனியவள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒழுக்காற்று நடவடிக்கையின் கீழ் இந்தக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தரம் குறைந்த பெற்றோல் கொள்வனவு தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கனிவள அமைச்சரினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
