வியாழன், 3 நவம்பர், 2011

அடுத்த ஆண்டுக்கான சீருடைத்துணிகள் பாக். சீனாவிலிருந்து இறக்குமதி

2012ம் ஆண்டுக்காக பாடசாலை சீருடைகளுக்கான துணிகளை பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சமர்ப்பித்திருந்தார்.

இதன்படி மேற்சட்டைக்கான வெள்ளை துணி 5,810,000 மீட்டர்களும் காட்சட்டைக்காக வெள்ளைத்துணி 980,000 மீட்டர்களும் நீலநிறத்துணி 770,000 மீட்டர்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

மேலும், பிக்குகளுக்கான சீருடை துணிக்காக 400,000 மீட்டர்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இவற்றுக்காக 1054 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை தெரித்துள்ளது.