புலத் சிங்கள பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளதுடன் மதுபான தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பினால் 86 மதுபான போத்தல்கள், மதுபான தயாரிப்புக்கான 370 கோடா அடங்கிய போத்தல்கள் ஒரு இரும்பு பெரல் உட்பட பலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹொரணை பொலிஸ் அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட பொருட்களையும் ஹொரண பொலிஸ் அதிரடிப்படையினர் புலத்சிங்கள பொலிஸாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
