ஞாயிறு, 6 நவம்பர், 2011

ஆயுதமுனையில் மட்டு.வில் பணம், நகைகள் இன்று கொள்ளை

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திராய்மடு சுனாமி மீள்குடியேற்ற கிராமத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாரிய கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பதினொரு இலட்சம் ரூபாய் பணம் மற்றும மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திராய்மடு சுவிஸ் கிராமத்தில்லுள்ள வீடொன்றிற்கு ஆயுதங்கள் மற்றும், கத்திகளுடன் வந்த மூவர் ஒருவரை வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் முச்சக்கர வண்டியைத் தாருங்கள் எனக்கேட்டு வீட்டின் கதவைத்தட்டியபோது,

வீட்டுக்காரார்கள் கதவைத் திறந்து வெளியே வர துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை கழுத்தில் வைத்து வீட்டிற்குள் நுழைந்து குறித்த நபர்கள் வீட்டு அலுமாரிகளை உடைத்து பணம் மற்றும் நகைகளைக்கொள்ளையடித்துச் தப்பிச் சென்றுள்ளனர்.