புதன், 2 நவம்பர், 2011

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத எட்டு உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை:

ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இதுவரை தங்களது சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத 08 உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் செயலகம் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

இந்நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த உறுப்பினர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்களின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் திங்கட்கிழமையுடன் முடிவடைந்துள்ளதாகவும் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை வழங்குமாறு தேர்தல் செயலகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மேற்படி 08 பேர் தவிர்ந்த ஏனையோர் தகவல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.