புதன், 2 நவம்பர், 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66 ஆவது பிறந்த தினம் மற்றும் அவர் ஜனாதிபதியாக ஆட்சி பொறுப்பேற்று ஆறு வருடங்கள் நிறைவெய்தியதை முன்னிட்டும் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இக்காலப் பகுதியில் ஜனாதிபதி இறையாசி வேண்டி மாத்தளை மாவட்டத்திலுள்ள சகல வழிபாட்டு நிலையங்களிலும் விசேட பூஜை பிரார்த்தனைகளை நடத்த ஏற்பாடு செய்யும்படி ஸ்ரீல.சு.க.வின் மாத்தளை மாவட்ட அமைப்பாளர் எம்.சசிகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாவட்டத்திலுள்ள நகரங்கள் மற்றும் தோட்டங்கள் அனைத்திற்கும் இது பற்றி அறிவித்துள்ளார்.