புதன், 28 டிசம்பர், 2011

யுத்தக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: ஆனால் இலங்கையில் அப்படி யாருமில்லை - (காணொளி)

யுத்தக் குற்றம் புரிந்ததாக அடையாளம் காணப்படும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவர் என அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.



ஆனால் நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் யுத்தக் குற்றவாளிகள் என எவரும் பெயரிடப்படவில்லை என அமெரிக்க ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்ற சர்வதேச விசாரணைக்கு இலங்கை ஒருபோதும் இணங்காது எனக் கூறியுள்ள ஜாலிய, யுத்தத்தின் இறுதி தருணங்கள் குறித்து ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து விடயங்கள் தொடர்பிலும் உள்நாட்டிலேயே தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள தாம் விரும்புவதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ள கருத்தையிட்டு தாம் அதிர்ச்சி அடைவதாக ஜாலிய விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.