செவ்வாய், 31 ஜனவரி, 2012

எதிர்வரும் பெப்ரவரி சுதந்திர தினத்தன்று 2000 சிறுகுற்ற சிறைக் கைதிகள் விடுதலை

எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2000 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய எதிர்பார்த்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறிய குற்றத்திற்காக தண்டப்பணம் செலுத்தத் தவறியவர்கள், வலது குறைந்தவர்கள், 70 வயதிற்கும் மேற்பட்டோர் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் எஸ்.திஸாநாயக்க தெரிவித்தார்.

அதற்கு அனுமதி பெறவென ஜனாதிபதி செயலகத்தில் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கான அனுமதி நீதி அமைச்சின் ஊடாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு கிடைக்கப்பெறவுள்ளது.

அதன்படி, விடுதலை செய்யப்படவுள்ள சிறைக் கைதிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.திஸாநாயக்க தெரிவித்தார்.