நாட்டில் வழங்கப்படவுள்ள 15 ஆயிரம் பட்டதாரி களுக்கான நியமனங்களில் வன்னி மாவட் டத்துக்கு 300 நியமனங்களை வழங்க ஜனாதிபதி உடன்பாடு தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்- கைத்தொழில்- வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள நறுவிலிக்குளம் அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போததே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் ஆசப் பிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது:- இன்று மாணவ சமூகம் கல்வித்துறையில் முன்னேற்றம் கண்டுவருவதற்கு இலவசக் கல்வி மிகவும் துணையாகவுள்ளது.
இந்த அரசாங்கம் வடக்கில் கல்வித் துறை மேம்பாட்டுக்காகப் பாரிய ஒதுக்கீடு களை செய்து வருகின்றது. சிறந்த எதிர் கால சமூகத்தை ஏற்படுத்த ஆசிரியர்களும்இ பெற்றோர்களும் கற்ற சமூகமும் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.
அழிந்து போன பாடசாலைக்கட்டடங்களை மீள்கட்டியெழுப்ப அரசாங்கம் பெரும் எண்ணிக்கையிலான நிதியினை ஒதுக்கியுள்ளது. மீள்குடியேறும் மக்களது கல்வி மேம்பாடுகளுக்காக பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஆசிரியப் பற்றாக்குறையினை நிவர்த்திக்க பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கையெடுக் கப்பட்டுள்ளது. இதனடிப்பையில் மன்னார் மாவட்டத்தில் 100 பேரும் வவுனியா மாவட்டத்தில் 1000 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 100 பேரும் இதன் போது உள்வாங்கப்படவுள்ளனர்.
அதே போன்று வன்னி மாவட்டத்தினை கல்விக்கான முக்கிய பிரதேசமாகவும் மாற்றுவதற்கு தேவையான அனைத்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
