புதன், 1 பிப்ரவரி, 2012

கிளிநொச்சியில் தொடரும் கண்ணிவெடி அகற்றும் பணிகள்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட முகமாலை இத்தாவில் வேம்படுகேணி போன்ற கிராமங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கபடவுள்ளதாக ஹலோரஸ்ட் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே குறித்த நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

முன்னைய காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினர்களதும் முன்னரங்க நிலைகளாக இருந்த பிரதேசம் என்பதால் மிகவும் அதிகளவான கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் என்பன காணப்படுவதால் ஏனைய பிரதேசங்களை விடவும் இப்பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் மிகவும் சிரமமானதாகவும் மேலதிக காலங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள் கிளாலி முதல் நாகர்கோவில் வரை பாரிய யுத்தம் இடம்பெற்ற பிரதேசம் எனவும் சுட்டிகாட்டியுள்ளனர்.