புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் 75 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து இவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜனரல் சந்தன ராஜகுரு தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 12ஆயிரம் பேர் புனர்வாழ்வு முகாம்களிற்கு உள்வாங்கப்பட்டதாகவும் அவர்களில் 11,375பேர் இதுவரையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது புனர்வாழ்வு அமைச்சின் கீழ் 750 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களும் மிக விரைவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவுள்ளனர் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
