ஞாயிறு, 8 ஜனவரி, 2012

பாவனைக்கு உதவாத நாணயங்களுக்கு புதிய நாணயங்கள் வழங்க நடவடிக்கை

நாடு முழுவதிலுமுள்ள பாவனைக்கு உதவாத நாணயங்கள் மற்றும் தாள்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை மத்திய வங்கி ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பத்து ரூபா, இருபது ரூபா மற்றம் ஐம்பது ரூபா பெறுமதியான தாள்களை சேகரிக்கம் நடவடிக்கைகள் முதற்கட்டமாக இடம்பெறுவதாக இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அஜித் நிவாட் கம்ரால் தெரிவித்தார்.

இதன்படி வியாபார நிலையங்கள், பாடசாலைகள் அடங்கலாக பணப்புழக்கம் அதிகம் உள்ள அனைத்து இடங்களிலும் பாவனைக்கு உதவாத நாணயங்களை திரட்டும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி பெற்றுக் கொள்ளும் பாவனைக்கு உதவாத நாணய தாள்களுக்கு பெறுமதியான நாணய தாள்கள் மத்திய வங்கியினால் வழங்கப்படும் எனவும் அஜித் நிவாட் கம்ரால் தெரிவித்தார்.