ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த மற்றுமொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வழக்கு விசாரணையை இன்று (30) நிறைவு செய்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பி.சுரசேன குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.
2008 செப்டெம்பர் மாதம் கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தை பகுதியில் வைத்து 8 கிராம் ஹெரோயினுடன் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
