இம்முறை தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிட வரும் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மற்றும் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் என்பவற்றை கருத்திற் கொண்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென அநுராதபுரம் பொலிஸ் அதிகாரி மகேஸ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 2ம் திகதி முதல் 10ம் திகதிவரை இந்த பாதுகாப்பு நடவடிக்கை அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு வரும் வாகனங்களை நிறுத்த 3 தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
கண்காட்சியை பார்வையிட மது அருந்திவிட்டு வருவோர், மது எடுத்து வருவோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
