நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சாளம்பைக்கேணி கூட்டுறவு சங்க வீதியிலுள்ள பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அப்பிரதேச பொது மக்களும், விவசாயிகளும் போக்குவரத்து செய்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வீதியானது விவசாயிகளின் பிரதான போக்குவரத்து பாதையாக காணப்படுவதால் வேளாண்மை அறுவடை செய்யும் இயந்திரங்கள், மற்றும் விளை பொருட்கள் என்பவற்றை கொண்டு செல்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஆகையால், நாவிதன்வெளி பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் இடிந்து வீழ்ந்துள்ள பாலத்தை துரிதமாக திருத்தியமைத்து பொது மக்களும், விவசாயிகளும் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களைப் போக்க முன்வர வேண்டுமென கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
