செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஆசிரியர் இடமாற்றத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் தன்னிச்சையாக செயற்படுகிறார்

தேசிய பாடசாலை ஆசிரியர் மாற்று சபை அழைக்கப்படாததால் பல ஆசிரியர்களின் இடமாற்றம் தடைபட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு அமைய வருடாந்தம் இடமாற்றம் கோரியுள்ள 3800 பாடசாலை ஆசிரியர்களின் இடமாற்றம் தற்போது தடைபட்டிருப்பதாக சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்ற சபையை வலுவிழக்கச் செய்து கல்வி அமைச்சின் செயலாளர் தனது தனிப்பட்ட தீர்மானத்தில் ஆசிரியர் இடமாற்றத்தை செயற்படுத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த செயற்பாட்டை கண்டிப்பதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.