ரஜரட்ட பல்கலைக்கழக இறுதி வருட மாணவர்கள் 6 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த 2 வருட கால வகுப்புத் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் அதனை கைவிட்டுள்ளனர்.
மேலும் 5 வாரகால வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 6 பேருக்கும் ஒரு மாணவிக்குமான வகுப்புத் தடை 4 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட மற்றுமொருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததான குற்றச்சாட்டில் இம்மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் குறித்து மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்கள் மேற்கொண்ட வகுப்புப் பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகம் கடந்த 23ம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
