இலங்கை அகதிகள் என சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்கள் ஜேர்மன் டேர்பின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போலி கடவுச் சீட்டை காட்டி பயணிக்க முயற்சித்த காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைது செய்யும் போது ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மூவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள போதும் அதன் உண்மைத் தன்மையை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
இவர்கள் இலங்கையர்கள் என கூறப்பட்ட போதும் இந்திய கடவுச் சீட்டே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
