பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு சுகாதார அமைச்சின் செயலாளருடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இச் சந்திப்பு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
இதேவேளை அரசவைத்தியர் சங்கத்திற்கு புதிய தலைவர் ஒருரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தொடர்பிலும் இதன்போது கலந்தரையாடப்படும் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உபசெயலாளர் தெரிவித்துள்ளார்.
புதிய தலைவர் நியமனம் தொடர்பில் தமது சங்க அங்கத்தவர்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்று எதிர்வரும் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவம் அவர் தெரிவித்துள்ளார்.
