செவ்வாய், 10 ஜனவரி, 2012

பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கி, முகத்தில் துப்பிய யுவதி கைது இடம்பெற்றுள்ளது.

சிறுமியொருவரை தொந்தரவுசெய்ததாக குற்றம்சுமத்தப்பட்ட யுவதி ஒருவருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடத்திக்கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை அந்த யுவதி தாக்கியதுடன் முகத்தில் துப்பிய சம்பவம் சியம்பலனாண்டுவையில் முத்துகண்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அதையடுத்து மேற்படி யுவதி உனடடியாக கைது செய்யப்பட்டார். அவரை மொனராகலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (லங்காதீப)