செவ்வாய், 10 ஜனவரி, 2012

யாழ். மானிப்பாய் வைத்தீஸ்வரா சந்தியில் கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ். மானிப்பாய் வைத்தீஸ்வரா சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றிலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த லான்ஸ்மாஸ்ரர் சாரதியான யூட்டன் (வயது 30) என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.