இந்திய கடற்பரப்பில், இலங்கை கடற்படையினால் இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல்கள் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என்று மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இலங்கைப் படையினர் தமது கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்களுக்கு எதிராக பலாத்காரத்தை பிரயோகிப்பதை நியாயப்படுத்த முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தால் அது இலங்கை கடற்பரப்பில் வைத்தே இடம்பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மதுரை மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மீனவர்கள் தரப்பிலான மனுவுக்கு பதிலளித்து தாக்கல் செய்த மனுவில், இலங்கை, மியன்மார், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான இந்திய வெளியுறவுத்துறை பணிப்பாளர் தீபக் மிட்டல் (Deepak Mittal ) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை – இந்திய மீனவர்கள் தமது கடல்பரப்பை தாண்டி செல்லும் போதே பிரச்சினைகள் எழுகின்றன. இந்தியாவின் மீனவர்கள் தமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதாக இலங்கை அதிகாரிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் மனுதாரின் வாதங்களுக்காக விசாரணைகள் எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
