இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினத்துக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளில் சுமார் 100 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இலங்கோவன் தெரிவித்தார்.
யாழ்.நூலகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது, வடமாகாணத்தின் அபிவிருத்திக் கட்டமைப்புக்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கும் இக்குழுவினருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளனர்.
