வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

அமெரிக்க விமான சேவையில் 13,000 பணியாளர்கள் நீக்கம்

அமெரிக்க விமான சேவையில் பணிபுரியும் 13000 தொழிலாளர்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செலவீனங்களை குறைக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமான சேவை அறிவித்துள்ளது.

அமெரிக்க விமான சேவை கடந்த 2011 ம் ஆண்டில் முதல் 9 மாதங்களில் 884 மில்லியன் டொலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அத்துடன் கடந்த 2001 ம் ஆண்டு தொடக்கம் அந்த நிறுவனம் 11 பில்லியன் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்தும் 88000 பணியாளர்களைக் கொண்ட அமெரிக்க விமான சேவை நிறுவனம் தமது பணியாளர்களில் 15 வீதமானோரை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பராமரிப்பு ஊழியர்களில் 4,600 பேரும், 1400 முகாமைப் பிரிவு பணியாளர்களும், 400 விமான ஓட்டிகளும் பணிநீக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.