லிபியாவில் கடாபி மகன் மாளிகையை மீட்க அவரது ஆதரவாளர்கள் இராணுவத்துடன் துப்பாகி சண்டையில் ஈடுபட்டனர்.
லிபியாவில் முஅம்மர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி பொது மக்களின் 8 மாத போராட்டத்துக்கு பின்னர் அகற்றப்பட்டது.
கடாபியும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள் மற்றும் மகன்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். கடாபியின் மகன் சாதி கடாபி நைகர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதற்கிடையே சாதி கடாபியின் ஆடம்பர கடற்கரை மாளிகை மத்திய திரிபோலியில் உள்ளது. தற்போது இது அரசின் வசம் உள்ளது. இந்த நிலையில் அந்த மாளிகையை கைப்பற்றும் திடீர் நடவடிக்கையில் சாதி கடாபியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
திடீரென அங்கு புகுந்து பாதுகாப்பாக நின்ற இராணுவ வீரர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புடன் கூடிய கரும்புகை சூழ்ந்தது.
