புதன், 8 பிப்ரவரி, 2012

திருநல்வேலியில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு; இருவர் காயம்; 2பேர் கைது

யாழ். திருநல்வேலி சந்தைப்பகுதியில் இன்று காலை இளைஞர்கள் மீது வாளினால் வெட்டிக் காயப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் சமாரியாக சந்தைப்பகுதியில் நின்ற இரு இளைஞர்களை துரத்தித் துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அவ்விரு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாளால் இளைஞர்களை வெட்டிக் காயப்படுத்திய இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.