புதன், 8 பிப்ரவரி, 2012

முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா உண்ணாவிரதத்தை கைவிட்டார்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மேற்கொண்டிருந்த உண்ணாவிரததத்தை கைவிட்டுள்ளதாக ஜ.தே.முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார். சரத் பொன்சேகா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தன்னை அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லத் தவறியதால் சரத் பொன்சேகா உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். பின்னர் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்ததையடுத்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

அனோமா பொன்சேகா தலைமையில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் முன்னால் காலை 10.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது. பல அரசியல் கட்சிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றின. ஐ.தே.க.வும் பின்னர்இதில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.