திங்கள், 6 பிப்ரவரி, 2012

கிரான்ட்பாஸில் 22 வயது இளம் யுவதி தீ வைத்து தற்கொலை

கொழும்பு - கிரான்ட்பாஸ் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தன் உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (05) மாலை தனது உடலுக்கு தீ வைத்துக் கொண்ட குறித்தப் பெண் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த குறித்த யுவதி இன்று (06) காலை உயிரிழந்துள்ளார்.

கிரான்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.