திங்கள், 6 பிப்ரவரி, 2012

ஜனவரி 31 ஆம் திகதி முதல் பிரிட்டனில் இலங்கைப் பெண்ணை காணவில்லை

பிரிட்டனில், இலங்கைப் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 31 வயதான கோகுலவதனி மயூரன் எனும் பெண் கொனேஹில் பகுதியிலிருந்து ஜனவரி 31 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார், கொலைச் சந்தேகத்தின் பேரில் குளோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்திருந்தனர். எனினும் பின்னர் அவர் குற்றசாட்டு எதுவும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

' விசாரணைகளின் பின்னர் இது காணாமல் போன ஒருவர் தொடர்பான விடயம் என நாம் நம்பினோம். ஆதனால் கைது செய்யப்பட்ட குளோசெஸ்டஷயர் நபர் குற்றச்சாட்டின்றி விடுவிக்கப்பட்டார்'ன எ புலனாய்வு அத்தியடச்கர் சிமோன் எட்கின்ஸன் கூறியுள்ளர். 'கோகுலவதனியின் நலன் குறித்து நாம் தீவிரமாக கரிசனை கொண்டுள்ளோம். அவரை காணும் அல்லது அவரின் இருப்பிடம் தெரிந்த எவரையும் எம்முடன் தொடர்புகொள்ளுமாறு கோருகிறோம்' எனவும் அவர் தெரிவித்தார்.

5 அடி 4 அங்குல உயரமான கோகுலவதனி திடகாத்திரமான உடலமைப்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.