சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயன்ற நிலையில் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவிலுள்ள தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 203 இலங்கையர்களில் 28 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினர்.
சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு, கனடா அரசாங்கம் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் போன்றன இணைந்தே மேற்படி குழுவினரை இலங்கைக்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளன.
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இக்குழுவினரில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயன்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள்இ மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவிலுள்ள தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
'டோகோ' நாட்டின் தலைநகரான 'லோமோ'விலுள்ள தடுப்பு முகாமொன்றிலேயே இவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று அம்முகாமிலிருந்து நாடு திரும்பியோர் மூலம் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
