புதன், 8 பிப்ரவரி, 2012

நாகப்பட்டினம் கடற்பரப்பில் 25 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய - நாகப்பட்டினம் கடற் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேர் ஐந்து மீன்பிடிப் படகுகளுடன் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கவிசா புதா, லக் சயுர, லக்சிறி-4, லக்சிறி-1 மற்றும் லக்சிறி -2 ஆகிய படகுகளும் அதில் பயணித்தவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் சர்வதேச கடல் எல்லை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து மீன்பிடி படகுகளிலும் உயர் தொழிலுட்பம் பொருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவ்வருடம் (2012) கைது செய்யப்பட்ட இரண்டாவது இலங்கை மீனவர் குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.