சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் ஆர்பாட்டத்தை பேரணியாக மாற்றியுள்ளது.
சிறையில் இருந்து உயர் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகா மருத்துவ பரிசோதனைகளுக்கென வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படாமல் மீண்டும் சிறைக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து ஆர்பாட்டக்காரர்கள் வெலிக்கடை சிறைச்சாலையை நோக்கி பேரணி செல்வதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
