கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளின் ஆதரவாளர்களாயிருந்த மட்டக்களப்பு வந்தாறுமூலை கிராமத்தைச் சேர்ந்த 250 பேர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தனர்.
வந்தாறுமூலை காளி கோயில் முன்றலில் நடைபெற்ற வைபவத்தில் கல்குடா தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபாலவிடமிருந்து கட்சியின் அட்டைகளைப் பெற்று இவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டனர்.
இதற்கான நிகழ்வு நேற்று (04) மாலை இடம் பெற்றது.
