வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஐரோப்பிய மண்டலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

ஐரோப்பிய மண்டல நாடுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை வரலாறு காணத அளவில் அதிகரித்துள்ளது. யுரோ நாணயத்தை பயன்படுத்தும் 17 நாடுகளில் கடந்த டிசம்பரில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 10.4 வீதமான அதிகரித்துள்ளது.

இதன்படி கடந்த டிசம்பர் மாதத்தில் யூரோ மண்டல நாடுகளில் 16. 5 மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்துள்ளனர் என ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் கணக்கெடுப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் ஸ்பெயினில் அதிகப்படியாக 22.9 வீதமானோர் வேலையில்லாமல் உள்ளனர்.

அதே போன்று கிaஸில் வேலையற்றோர் எண்ணிக்கை 19.2 வீதமாக பதிவாகியு ள்ளது. அதிலும் இளை ஞர்களே அதிகமாக வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். ஸ்பெயின் இளைஞர் களில் பாதிப்பேர் முழுநேர வேலையில்லா மல் திண்டாடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள ஐரோப்பிய மண்டல நாடுகள் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடித்து வருகிறது.

இந்நிலையில் அங்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பொருளியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.