திங்கள், 6 பிப்ரவரி, 2012

கொட்டாவையில் மின்னல் தாக்கம்: பீதியால் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

கொட்டாவ - பின்ஹேன பகுதியில் மின்னல் தாக்கம் காரணமாக சுமார் 20 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தால் குறித்த வீடுகளில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் செயலிழந்துள்ளதென அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (05) இரவு வேளையில் ஏற்பட்ட இந்த மின்னல் தாக்கத்தினால் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.