திங்கள், 6 பிப்ரவரி, 2012

இன்று காலை மத்திய பிலிபைன்ஸில் பூமியதிர்வு: இலங்கைக்கு பாதிப்பு இல்லை

மத்திய பிலிபைன்ஸில் ஏற்பட்டுள்ள பூமியதிர்ச்சியால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய பிலிபைன்ஸில் இன்று காலை இடம்பெற்ற 6.7 ரிக்டர் அளவிலான பூமியதிர்ச்சியை அடுத்து கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.

அத்துடன் இப்பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பிலிபைன்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடலுக்கு அடியில் 20 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என ஆசிய - பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையமான ஹவாய் தெரிவித்துள்ளது.

இந்த பூமியதிர்ச்சியை அடுத்து தொடர்ச்சியாக 4.8, 5.6 என்ற ரிக்டர் அளவில் சிறு பூமியதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.