வியாழன், 9 பிப்ரவரி, 2012

பாக்லாந்தில் ராணுவம் குவிப்பு: இங்கிலாந்து மீது ஐ.நாவில் புகார் செய்வோம்- அர்ஜெண்டினா அதிபர் அறிவிப்பு

அர்ஜெண்டினா அருகே இங்கிலாந்துக்கு சொந்தமான பாக்லாந்து தீவு உள்ளது. இந்த தீவுக்கு அர்ஜெண்டினாவும் உரிமை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து பாக்லாந்து பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்பி வருகிறது. இது தொடர்பாக அர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா கூறியதாவது:-

இங்கிலாந்து, தெற்கு அட்லாண்டிக் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச சமூகத்தில் போர் பதட்டத்தை உருவாக்குகிறது. இது சம்பந்தமாக ஐ.நா பாதுகாப்பு சபையிலும், பொது சபையிலும் புகார் செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.