வியாழன், 9 பிப்ரவரி, 2012

வைத்தியரின் அனுமதியின்றி பலி பீடம் செல்லவிருந்த பத்து ஆடுகள் மீட்பு

கால்நடை மிருக வைத்தியரின் அனுமதியின்றி பத்து ஆடுகளை லொறியொன்றில் மஸ்கெலியாவிலிருந்து நீர்க்கொழும்புக்கு ஏற்றிச்சென்று கொண்டிருந்த போது மஸ்கெலியா பொலிஸார் அந்த ஆடுகளை மீட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஆடுகள் மவுசாகெல பகுதி தோட்டமொன்றிலிருந்து நீர்க்கொழும்புக்கு இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மஸ்கெலியா பிரதேசத்தில் வைத்து ஆடுகளையும் லொறியையும் கைப்பற்றிய மஸ்கெலியா பொலிஸார் சந்தேக நபர்களையும் அட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.