இந்திய கரையோர கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் நால்வர் இலங்கை வந்தடைந்துள்ளதாக எமது கட்டுநாயக்க விமான நிலைய செயதியாளர் தெரிவிக்கின்றார்.
இன்று முற்பகல் 11.35 மணியளவில் இலங்கை வந்த யூ.எல்-122 என்ற விமானத்திலேயே இவர்கள் இலங்கை வந்துள்ளதாகவும் இவர்கள் கல்முனைப் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
