கடமை நேரத்தில் மதுபோதையில் காணப்பட்ட புத்தளம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றப் பதிவாளரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி பதிவாளரான ஏ.சி.குணசேகர நேற்று வியாக்கிழமை 3.30 மணியளவில் நீதிமன்றத்திலுள்ள தனது அலுவலகத்தில் மதுபோதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி நபர் தொடர்பான மருத்துவ அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொண்ட பின்னர் அவரை பொலிஸ் பிணையில் விடுதலை செய்தனர்.
அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் இவர் மதுபோதையில் காணப்பட்டதால் இவர் பல சந்தர்ப்பங்களில் சிரேஷ்ட அதிகாரிகளினால் கண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
