மாத்தறைக்கும் அளுத்கமைக்கு மிடையிலான அதிவேக ரயில் சேவை இம் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை மாத்தறைக்கும் கொழும்புக்குமிடையிலான முழுமையான ரயில் சேவை ஏப்ரல் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் பி. ஏ. பி. ஆரியரத்ன குறிப்பிட்டார்.
