புதன், 1 பிப்ரவரி, 2012

இலங்கைக்கு எதிராக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார்! அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டு கூட்டத் தொடரில் சுமத்தப்படும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

சுவீட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மனித உரிமைகள் மகாநாடு அடுத்த மாதம் 27ம் திகதி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கவுள்ள இலங்கை குழு வினர் தயார் நிலையில் உள்ளதாக வெளி நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார்.

நடைபெறவுள்ள மனித உரிமைகள் மகாநாட்டிலே ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஐரோப் பிய நாடுகள் இலங்கையின் மனித உரி மைகள் தொடர்பாக முன்மொழிவொன்றினை கொண்டுவரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவரும் எந்தவொரு முன்மொழிவுகளுக்கும் அச்சமின்றி பதிலளிக்க தயாராக உள்ள தாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப் பிட்டார்.