தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் மீண்டும் ஒரு தடவை இலங்கை வரவுள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ரொபர்ட் ஓ பிளேக் தனது இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச முக்கிய பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் இவர் அதிகூடிய கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரொபர்ட் ஓ பிளேக் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வந்துசென்றமை குறிப்பிடத்தக்கது.
