திங்கள், 6 பிப்ரவரி, 2012

பொய்யான செய்திகளைப் பரப்புவதில் உதயன் பத்திரிகை முன்னணியில்!

வடபகுதியில் தினமுரசு பத்திரிகை முன்னணி வகிக்கிறது. இதன் வளர்ச்சியில் பொறாமை கொண்ட சவ்றா சரவணபவான் ஈ.பி.டி.பி கட்சிக்கு எதிராக பொய்யான செய்திகளை கட்டவிழ்த்து விடுகிறது. உதயன் பத்திரிகையின் பல செய்திகள் பொய்யென்று பல தடவைகள் நிரூபிக்கபட்டுள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சடலத்துடன் புறப்பட்ட 11 பேரைக் காணவில்லையென்ற செய்தி உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இறந்தவர் என்ற் குறிப்பிடப்பட்டிருந்தவர். உதயன் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று தான் உயிருடன் இருக்கும்போது எப்படி இப்படியான பொய்யான செய்தியை வெளியிடலாம் என்று முறையிட்டிருந்தார். இப்படி பல பொய்யான செய்திகள் உதயன் பத்திரிகையில் வெளியிடுவது மோசடிப் பேர்வழியான சவ்றா சரவணபவானுக்கு வழக்கமாகிவிட்டது. உதயனில் வெளிவந்த சமீபத்திய செய்தியான உதயன் பத்திரிகைக்கு தீவைத்தது கடற்படையினரும்,ஈ.பி.டி.யினரும் என்று பசில் ராஜபக்ஷ கூறியதாக குறிப்பிட்ட செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. விக்கி லீக்ஸில் வெளிவந்ததாக கூறி பொய்யான செய்திகள் பல வெளிவருகின்றன. இதனை எதுவித ஆய்வுமின்றி வெளிநாடுகளிலுள்ள இணையதளங்கள்,வானொலிகள் தங்கள் செய்திகளில் குறிப்பிடுகின்றன. குறிப்பாக phycho ராமராஜனின் வானொலியும்,இணையதளமும் இப்படி அரசங்கத்திற்கும்,ஈபிடிபி கட்சிக்கும் எதிரான செய்திகளை உண்மைத்தன்மையை ஆராயாமல் வெளியிடுகின்றன.

ஊடக சட்டதிட்டங்களை மீறியதனால் ரி.பி.சி. வானொலியும். ராமராஜனும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடப்படவேண்டிய விடயம்.